ஆனால் சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியுடனான பிசினஸ் உறவுகளை முடித்துக் கொள்வதாக அந்த நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து வரும் சீசனைப் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்து வழங்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
தயாரிப்பு நிறுவனம் மாறியதால் நிகழ்ச்சியின் நடுவர்களான வெங்கடேஷ் பட், செஃப் தாமு இருவருமே கூட நிகழ்ச்சியிலிருந்து வெளியேறலாம் எனப் பேசப்பட்ட சூழலில், வெங்கடேஷ் பட்டும் ஒரு பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அதாவது புதிய ஒரு தளத்தில் தன்னுடன் தாமுவும் இருப்பார் என்றார். ஆனால் தாமுவோ விஜய் டிவியை விட்டு விலக மறுத்து விட, பட் மட்டும் வெளியேறினார்.
உடனடியாக களத்தில் இறங்கிய சேனல், பட்டுக்குப் பதில் நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜைக் கமிட் செய்து அடுத்த சீசனுக்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள்.
தொடர்ந்து ஐந்தாம் சீசனில் கலந்து கொள்ளும் குக் மற்றும் கோமாளிகளைத் தேர்வு செய்து ஷூட்டிங்கையும் தொடங்கி விட்டார்கள்.
ஶ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், பிரியங்கா தேஷ்பாண்டே, அக்ஷய் கமல் உள்ளிட்ட சிலர் குக்குகளாகவும் நடிகை ஷப்னம், ராமர், நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட சிலர் கோமாளிகளாகவும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்கிற செய்தியையும் எக்ஸ்க்ளூசிவாக ஏற்கெனவே விகடன் தளத்தில் வெளியிட்டிருந்தோம்.
+ There are no comments
Add yours