சப்தம் படத்தின் டீசர் அப்டேட்
11 ஏப், 2024 – 12:41 IST
ஈரம் படத்திற்கு பிறகு இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘சப்தம்’. இதில் சிம்ரன், லட்சுமி மேனன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆல்பா பிரேம்ஸ், 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இதன் டீசர் நாளை ஏப்ரல் 12ந் தேதி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours