தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர், எழில் ஸ்கூலுக்கு சென்றிருக்க அங்கு அஞ்சலி டீச்சர் எழிலுக்கு டார்ச்சர் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அஞ்சலி டீச்சர் எழிலிடம் வந்து உங்க போன் நம்பர் கிடைக்குமா? நீங்க ஏன் இரண்டாவது திருமணம் செய்ய கூடாது என்றெல்லாம் கேட்க எழில் அங்கிருந்து எஸ்கேப் ஆகி ஓடி ஒளிகிறான். மறுபக்கம் சுடர் அருகே வந்து நிற்கும் சதாசிவம் அவளை கீழே விழ வைத்து அவள் மீது தண்ணீரை ஊற்றி விடுகிறான்.
அவனுக்கு பயந்து ஓடி வரும் சுடர் எழில் மீது மோதி நீங்க என்ன சார் இங்க மறைந்திட்டு இருக்கீங்க என்று கேட்க அந்த பொண்ணு டார்ச்சர் பண்ணுது என்று சொல்கிறான், எழில் இதே கேள்வியை திருப்பி கேட்க சுடர் அந்த சதாசிவத்தை ஒரு நாள் அடிச்சிட்டேன், அவன் தான் தண்ணீர் ஊற்றி விட்டான் என்று சொல்கிறாள்.பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பி வருகின்றனர்.
காரில் வரும் போது எழில் நீ தான் பசங்கள மாத்தின என்று பெருமையாக பேசி வர சுடர் ஒரு இடத்தில காரை நிறுத்த சொல்லி இறங்கி போய் ரிப்பேருக்கு கொடுத்திருந்த இந்துவின் போனை வாங்கி வந்து கொடுக்கிறாள். இதை பார்த்த எழில் எமோஷன் ஆகிறான், பிறகு சுடர் வீட்டிற்கு வர கனகவல்லி பசங்களுக்கு துணி எடுக்கணும், இதை வாங்கணும் அதை வாங்கணும் என்று லிஸ்ட் போட்டு கொண்டிருக்கிறாள்.
இதை பார்த்த சுடர் எதுக்கு இந்த லிஸ்ட் என்று கேட்க எப்போதும் இந்துவின் பிறந்த நாளை ஆசிரமத்தில் கொண்டாடுவது தான் வழக்கம், அவ போன பிறகு சரியாவே கொண்டாட முடியல என்று சொல்கிறாள். அவங்களுக்கு சமைக்க தான் லிஸ்ட் என்று சொல்கிறாள். சுடர் என் கையால் சமைக்கறேன் என்று சொல்ல கனகவல்லியும் ஓகே சொல்கிறாள்.
அடுத்து வேலு சுடர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வீட்டிற்குள் நுழைந்து தேடுகிறான். இப்படியான நிலையில் அது நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?
நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | ரம்ஜானுக்கு ட்ரீட்.. விஜயின் ‘GOAT’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours