பாலிவுட்டில் பலரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த பிறகு திருமணம் செய்துள்ளனர். சிலர் அவ்வாறு வாழும் போது அவர்களுக்குள் ஒத்து வராத பட்சத்தில் பிரிந்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பழம்பெரும் பாலிவுட் நடிகை ஜீனத் அமான் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் கொடுத்துள்ளார். அதில் உங்களில் ஒருவர் உறவு முறை பற்றி என்னிடம் கேட்டார். நான் இதுவரை பகிர்ந்துகொள்ளாத தனிப்பட்ட கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.
நீங்கள் ஒரு உறவில் இருந்தால், திருமணம் செய்வதற்கு முன்பு நீங்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்று நான் திடமாக பரிந்துரைக்கிறேன். லிவ்-இன் ரிலேஷன்ஷிப்களைக் கொண்டிருந்த என் இரு மகன்களுக்கு நான் எப்போதும் கூறிய அறிவுரை இதுதான். இரண்டு பேர் தங்கள் குடும்பங்களை இதில் ஈடுபடுத்துவதற்கு முன்பு லின் இன் முறையில் வாழ்ந்து முதலில் தங்கள் உறவை இறுதி பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்கள் என்பது எனது கருத்து. ஆயிரக்கணக்கான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களால் சேர்ந்து செயல்பட முடியுமா என்பதை ஆய்வு செய்யவேண்டும்.
உங்களைப்பற்றி தினமும் சில மணி நேரம் சிந்திப்பது நல்லது. லிவ் இன் முறையில் வாழ்வது இந்திய சமுதாயத்தில் இன்னும் உறுத்தலாகவே பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours