தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `மீனாட்சி பொண்ணுங்க’ தொடர் நாயகன் ஆர்யனை ஷபானா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `மிஸ்டர் மனைவி’ தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த இவர் அந்தத் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
ஷபானா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக பகிர்ந்திருக்கிறார். அதில், `நீண்ட யோசனைக்குப் பிறகு மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்திருக்கிறேன். விலகுதல் என்பது அவ்வளவு எளிமையானது அல்ல. ஆனால் இந்த நேரத்தில் இது சரியான முடிவு என நான் நம்புகிறேன்.
+ There are no comments
Add yours