Anna Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி முத்துபாண்டியை பார்த்து உங்களுக்கு என் அண்ணன் கிட்ட தொற்று போறதே வேலையா போச்சு என்று சொல்லி அவமானப்படுத்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இன்றைய அண்ணா சீரியல் (Anna Serial) எபிசோடில், இசக்கி தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில் முத்துப்பாண்டி எழுந்து அவளை காலால் எட்டி உடைத்து போய் தண்ணி எடுத்துட்டு வா என்று சொல்ல அவள் உங்களுக்கு தானே தாகமா இருக்கு, போய் எடுத்துக்கோங்க என்று சொல்ல முத்துப்பாண்டி மீண்டும் அவளை எட்டி உதைக்க இசக்கி தலையணைக்கு கீழே இருந்து அரிவாளை எடுத்து காட்ட அவன் அலண்டு போகிறான்.
தண்ணீ தானடி கேட்டேன், அதுக்கு எதுக்கு அருவாளை நீட்டுற என்று கேட்க இனிமே அப்படி தான் என்று சொல்கிறாள், உங்களுக்கு தாகம் எடுத்தா நீங்க போய் எடுத்து குடிங்க என்று சொல்ல அவன் நானே எடுத்துக்கறேன் என்று எழுந்து வெளியே வருகிறான். மறுபக்கம் சௌந்தரபாண்டியும் இரும்பி விட்டு பாக்கியத்தை தண்ணீர் எடுத்துட்டு வர சொல்கிறார்.
பாக்கியமும் இசக்கியை போல நீங்களே போய் எடுத்து குடிங்க என்று சொல்கிறாள், உடனே சௌந்தரபாண்டி அதட்டி கேட்க பாக்கியமும் அடங்காமல் அதட்டி பதிலை சொல்ல சரி டி நீ தூங்கு நானே எடுத்துக்கறேன் என்று சொல்லி வெளிய வருகிறார். மறுநாள் காலையில் முத்துபாண்டியை இசக்கியை ஷூவுக்கு பாலிஸ் போட சொல்ல அவள் பாலிஷ் தானே போடணும், போட்டுடலாம் என்று சிரித்து கொண்டே சொல்ல முத்துபாண்டிக்கு பிளாஷ் கட் நியாபகம் வந்து நானே போட்டுக்கறேன் என்று சொல்கிறான்.
மேலும் படிக்க | அண்ணா சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை – இனி அவருக்கு பதில் யார்?
அடுத்து பஞ்சாயத்து கூட முத்துபாண்டியும் அங்கு வந்து விட ஷண்முகம் என்ன பிரச்சனை என்று விசாரிக்க மண்ணெண்ணெய் ஊறி கொளுத்திக்கொள்ள பார்த்தவன் என் பொண்டாடி என் கூட வாழ மாட்டேன்னு சொல்றா, சேர்த்து வையுங்க என்று ஷண்முகம் அந்த பெண்ணிடம் பேச அவள் அவர் என்னை நெறைய கொடுமை படுத்திட்டாரு என்னால் வாழ முடியாது என்று சொன்னதும் அந்த நபர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க அவளும் மன்னித்து விடுகிறாள்.
இந்த நேரத்தில் அங்கு வரும் சௌந்தரபாண்டி ஊருக்கு தான் உபதேசம், இவனுக்கு இல்ல, இவனுக்கும் என் பொண்ணுக்கும் எப்படி கல்யாணம் நடந்தது என்று ஊருக்கே தெரியும், என் பொண்ணு இவன் கூட சந்தோசமாக வாழல என்று பிரச்சனை செய்ய ஷண்முகம் நாங்க சந்தோசமாக தான் வாழறோம் என்று பதில் சொல்ல அதை நீ சொல்லாத, என் பொண்ணு சொல்லட்டும் என்று சொல்கிறார்.
பிறகு சனியனை அனுப்பி பரணியை கூப்பிட்டு வர சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?
அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய் அப்டேட்: எழிலுக்கு ரூட் விடும் டீச்சர்.. சுடர் விட்ட சவால்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours