படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்த வீடியோ ஏப்ரல் 22 -ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக மோகன் நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது. ரஜினி இப்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அக்டோபரில் வெளிவருகிறது என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர். இந்நிலையில் ‘தலைவர் 171’ படத்திற்கான வேலைகள் தடாலடியாக ஆரம்பித்துவிட்டதால், நடிகர்கள் குறித்த தகவல்கள் பரவி வருகின்றன.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. மே மாதத்தோடு இதன் படப்பிடிப்பு நிறைவடையும் என்கிறார்கள். இந்நிலையில் ரஜினி அடுத்து நடிக்கும் ‘தலைவர் 171’ படத்திற்கான அப்டேட்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
சமீபத்தில் நடந்த விகடனின் நம்பிக்கை விருது விழாவில் கூட, ‘தலைவர் 171’க்கான அப்டேட்டை தெரிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். ”’தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22 வெளியாகும் ரஜினியை இதுவரை பார்க்காத தோற்றத்தில் பார்க்கலாம்” என்றார். இந்நிலையில் படத்தின் தொழில்நுட்ப டீம், லோகேஷின் தூண்கள்தான். ஒளிப்பதிவாளராக ‘விக்ரம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் பிலோமின் ராஜ், ஆக்ஷன் அன்பறிவ் ஆகிய டெக்னீஷியன்கள் கமிட் ஆகியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கிடையே ‘தலைவர் 171’வது படத்தின் டைட்டில் ‘கழுகு’, ‘ஈகிள்’, ‘காளி’ பல டைட்டில்களை பரிசீலித்து ஒன்றைத் தேர்வு செய்துள்ளார்கள்.
+ There are no comments
Add yours