படப்பிடிப்பு, படத்தயாரிப்பு போன்ற விஷயங்களை ஏ.வி.எம். செட்டியார்தான் பக்காவா திட்டமிடுவார்னு ஒரு பெயருண்டு. அதைப் போலதான் ஆர்.எம்.வீ என்பதால் அவரை நான் ‘குட்டிச் செட்டியார்’னு சொல்லுவேன். ஏன்னா ரெண்டு பேரையும் திருப்திபடுத்துறது அவ்ளோ சிரமமான விஷயம்னு சொல்வாங்க. ஆர்.எம்.வீயோடு இணைந்து பணியாற்றின அனுபவமும் உண்டு. அவர் கம்பன் கழகத் தலைவராக இருந்த போது நான் செயற்குழு உறுப்பினராக இருந்திருக்கேன்.
ஒரு தொண்டராக இருந்து தலைவராகி, இன்று அருளாளராக மறைந்திருக்கிறார். அவரது சத்யா மூவீஸில் ஒரு படம் இயக்கியிருக்கேன். தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆந்திரா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இரண்டுபேரும் இணைந்து நடித்த ‘ராணுவ வீரன்’ படத்தை இயக்கினேன். அந்த சமயத்தில் ஆர்.எம்.வீ. அமைச்சராக இருந்தார். நாங்க படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி அருகே டாப் சிலிப் என்ற இடத்தில் படமாக்கினோம். அந்த இடங்களைப் பார்த்த போது அதன் எழில் கொஞ்சும் இடங்கள் ரொம்பவே கவர்ந்தது. இந்தியாவின் சுவிட்சர்லாந்துன்னு அந்த இடத்தைச் சொல்வாங்க. அதனை ஒரு சுற்றுலா ஸ்பாட் ஆக்கலாம் என்று தோணவே அதை ஆர்.எம்.வீ. சாரிடம் சொன்னோம்.. உடனே அந்த ஸ்பாட்டிற்கு வந்து சுற்றுலாத் தலம் ஆக்கினார்.
எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்களைத் தயாரித்தவர். அவருடைய படங்கள்ல கதை, பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். அந்த அளவுக்கு ஈடுபாட்டோட படங்களைத் தயாரிப்பார். நல்ல மனிதர், கல்வியாளர், ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர். திரைக்கதையாளராகவும் புகழ்பெற்றவர். அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை என் தந்தையார் ராம சுப்பையா சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்” என கனத்த இதயத்தோடு சொன்னார் எஸ்.பி.முத்துராமன்
+ There are no comments
Add yours