Malayalam Movie Premalu OTT Release Date When And Where To Watch It Starring Mamitha Baiju Mathew Thomas

Estimated read time 1 min read

Premalu OTT Release Date : தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பிய பிளாக்பஸ்டர் திரைப்படமான “பிரேமலு” டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. மேலும் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

பிரேமலு:

கடந்த சில மாதங்களாக, தமிழ் நாட்டில் மலையாள திரைப்படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. அப்படி வெளியாகி ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, பிரேமலு. இப்படம், உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் பெற்றதை தொடர்ந்து, இதன் ஓடிடி ரிலீஸிற்காக பலர் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இப்படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

படக்குழு:

கிரிஷ் A D  இயக்கத்தில் உருவான  இந்தத் திரைப்படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

மேலும் படிக்க | தங்கள் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி தனுஷ்-ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு!

 

படத்தின் கதை:

GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத் நகருக்குச் செல்லும்  பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் கதையை பிரேமலு விவரிக்கிறது. ஹைதராபாத்தில் அவன், ஐடி துறையில் பணிபுரியும் ரீனுவைச் சந்திக்கிறான், அவர்கள் நண்பர்களாகிறார்கள். சச்சின் ரீனுவை ஒருதலையாகக்  காதலிக்க ஆரம்பிக்க, அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், நம்மை ஒரு அழகான பயணத்திற்குக் கூட்டிச் செல்கிறது.  

நஸ்லென், மமிதா, சங்கீத் பிரதாப், மற்றும் அகிலா பார்கவன், முதன்மைப்பாத்திரங்களில் அசத்தியுள்ளனர். “ஜேகே”யாக ஷியாம் மோகன் அனைவரையும் கவரும் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார்.  மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், ஷமீர் கான் மற்றும் K S பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேத்யூ தாமஸ் ஒரு அழகான கேமியோவாக பாத்திரத்தில் தோன்றியுள்ளார். சியாம் புஷ்கரன் சிறு கதாபாத்திரத்தில்  ரசிகர்களை மகிழ்விக்கிறார்.  

எப்போது பார்க்கலாம்?

பிரேமலு படம், ஏப்ரல் 12, 2024 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும், கலக்கலான ரொமான்ஸ் காமெடி  திரைப்படமான இதனை பார்க்க, பல ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | Prasanth : நடிகர் பிரசாந்திற்கு 2வது திருமணமா? மணப்பெண் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours