Karthigai Deepam Zee Tamil Tv Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் காரத்திக் உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமியை மீட்டெடுத்த ஹாஸ்பிடலில் அனுமதித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வீட்டிற்கு வரும் கார்த்திக் அம்மாவோட இந்த நிலைமைக்கு ஐஸ்வர்யா அண்ணி தான் காரணம், அவங்க தான் எல்லா வேலையும் பண்ணி இருக்காங்க என்று சொன்னதும் அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஐஸ்வர்யா எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, என்னை உனக்கு பிடிக்காது என்பதால் தேவையில்லாமல் பழி போடாத என்று வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறாள்.
கார்த்திக் அண்ணி எனக்கு எல்லாமே தெரியும், தயவு செய்து பொய் சொல்லிட்டு இருக்காதீங்க என்று சொல்ல ஐஸ்வர்யா ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசாத என்று சொல்ல அந்த நேரம் போலீஸ் வீட்டிற்கு வருகிறது. ஐஸ்வர்யா வாட்சப் காலில் பேசிய அனைத்து ரெக்கார்டும் இருக்கும் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
ஐஸ்வர்யாவை காப்பாற்ற ராஜேஸ்வரி நான் தான் எல்லாத்தையும் பண்ணேன், என் பொண்ணை அவங்க அடிச்சதால் அந்த கோபத்தில் இப்படி பண்ணிட்டேன் என்று சொல்ல கார்த்திக் அதை நம்ப மறுக்கிறான், எல்லாரும் கேள்வி கேட்க ஐஸ்வர்யாவும் ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேள்வி கேட்டு டிராமா போட போலீஸ் ராஜேஸ்வரியை கைது செய்து ஜெயிலில் அடைகிறது.
பிறகு ஐஸ்வர்யா ஸ்டேஷனுக்கு வந்து அம்மாவிடம் நல்ல வேளை என்னை காப்பாத்தீட்டீங்க, இல்லனா என் வாழ்க்கையே போய் இருக்கும் என்று சொல்லி அந்த தீபாவையும் கார்த்தியையும் சும்மா விட மாட்டேன் என்று சொல்ல ராஜேஸ்வரி எதுவும் செய்து மாட்டிக்காத, என்று சொல்கிறாள்.
மறுபக்கம் அபிராமி கண் விழிக்க கார்த்திக் ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேள்வி கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | Pushpa 2 The Rule: இணையத்தில் சாதனை படைத்துள்ள அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 டீசர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours