இந்தியில் பிக் பாஸ் சீசன்- 5, நாகினி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பிரபலமானவர் சன்னி லியோன். அதன்பின் பாலிவுட் சினிமாவில் கால்பதித்த பின்னர், அவர் பல படங்களுக்கு நடனம் ஆடுவது, துணை நடிகையாக நடிப்பதுடன் ஒரு சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் வாழ்வில் நடந்த கசப்பான அனுபவம் ஓன்றைப் பகிர்ந்திருக்கிறார். “ எனது திருமணத்திற்கு முன்பு நான் ஒருவரைக் காதலித்தேன். எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. என்னையும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கும் அவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு ஏதோ தவறு இருப்பதாகவும், அவர் என்னை ஏமாற்றுவதாகவும் உணர்ந்தேன்.
+ There are no comments
Add yours