இந்தியாவின் ப்ரீமியர் ஃபேஷன், அழகு சாதனம் மற்றும் பரிசுப்பொருட்கள் போன்ற அனைத்துக்குமான அமைவிடமாக விளங்கும் ஷாப்பர்ஸ் ஸ்டாப், சென்னை சேத்துப்பட்டில் தனது விற்பனை நிலையத்தை மீண்டும் தொடங்கப்படும் நிகழ்வை கொண்டாடியது. இந்த நிகழ்வில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததோடு அதற்கு அழகையும் வசீகரத்தையும் சேர்த்தார். ஷாப்பர்ஸ் ஸ்டாப், சென்னையின் ஃபேஷன்-ஃபார்வர்டு குடியிருப்பாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை இந்த மறுதொடக்கத்தின் மூலம் மறுவரையறை செய்வதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஷாப்பர்ஸ் ஸ்டாப்பின் இந்த புதிய உயரிய மேம்பட்ட தோற்றம், ஷாப்பிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது.
தனித்துவமான விவரங்கள் மீது இந்த ஸ்டோரின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் செலுத்தப்பட்ட தீவிர கவனம், பல புதிய பிராண்டுகள், தனிப்பட்ட ஷாப்பர் லவுஞ்ச் மற்றும் அதன் ஒட்டுமொத்த ஷாப்பிங் அனுபவம் ஆகியவை சென்னை மக்களை தூய்மையான இன்ப உலகில் திளைக்கச் செய்யும். இந்த விற்பனை நிலையத்தில் உங்கள் பாணி தோற்றத்துக்கு கச்சிதமாகப் பொருந்தும் மிகவும் நவநாகரீகமான அழகு சாதனங்களை கண்டறிய உங்களுக்கு உதவும் வகையில் 500+ க்கும் அதிகமான பிராண்டுகள், புத்தம் புதிய நவநாகரீக ஃபேஷன் ஆடைகள், மேம்பட்ட அழகின் அனுபவம், பரந்த அளவிலான வகை வகையான கடிகாரங்கள், பைகள், சன்கிளாஸ்கள், வாசனை திரவியங்கள் மற்றும் பரிசுப்பொருட்களின் விருப்பத்தேர்வுகள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் அடங்கியுள்ளன.
மேலும் படிக்க | ஜீன்ஸ் படத்தில் நடிக்க இருந்தது ‘இந்த’ முன்னணி ஹீரோதான்! அவர் யார் தெரியுமா?
அத்துடன் கூடுதலாக , தி ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் கிளப் – ஷாப்பர்ஸ் ஸ்டாப் இன் பிரபலமான லாயல்டி ப்ரோக்ராம், ஷாப்பிங் அனுபவத்தை மேலும் பலன்மிக்கதாகச் செய்கிறது. அதன் பிரீமியம் பிளாக் கார்டு உறுப்பினர் திட்டமானது லாயல் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான பிரத்தியேக நிகழ்வுகளுக்கான அழைப்பு , தாராளமான 1 வருட ரிட்டர்ன் பாலிசி மற்றும் இன்னும் பல சிறப்பு சலுகைகளை வழங்கி அனுபவித்து மகிழச் செய்கிறது. ஷாப்பர்ஸ் ஸ்டாப் தனது வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் ஷாப்பிங் அனுபவத்தை வழங்க உறுதி பூண்டுள்ளது. பியூட்டி மேக்ஓவர், பெர்சனல் ஷாப்பர் போன்ற சேவைகள் சென்னை வாழ் மக்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்தி உயர்த்தும் என்பது நிச்சயம்.
சென்னை விற்பனை நிலையத்தின் இந்த அதிரடி மாற்றமானது, ஃபேஷன், அழகு சாதனங்கள், வாசனை திரவியங்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் இன்னும் பல நவநாகரீகப் பொருட்களின் உயர்தரமான பிராண்டுகளுடன், மதிப்புக் கூடிய மற்றும் பகட்டான உயர்தர ஆடம்பரப்பொருட்களை வழங்குவதில் ஷாப்பர்ஸ் ஸ்டாப் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. ரால்ப் லாரன், பிராடா, அர்மானி, வெர்சேஸ், ஹ்யூகோ பாஸ், கால்வின் க்ளீன், ஃபாஸ்ஸில், MAC, YSL, ஒன்லி ,லீவைஸ், AND, BIBA, குளோபல் தேசி, ரேரிஸ்ம், காஸோ, மேடம், ரேர் ராபிட், UCB, ஜாக் ஜோன்ஸ், சூப்பர்டிரை, மாமாஎர்த், மினிமலிஸ்ட், லோரியல் போன்ற இன்னும் பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு பிராண்டுகளிலிருந்து தங்களுக்கு விருப்பமானவற்றை ஒருவர் தேர்வு செய்யலாம்.
உன்னதமான உணர்வுடன் கூடிய ஃபேஷன் ஆர்வலர்களுக்கு உகந்தவற்றை வழங்கி அவர்களின் தேவையை இந்த ஸ்டோர் பூர்த்தி செய்யும் இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த ஷாப்பர்ஸ் ஸ்டாப் லிமிடெட்டின் கஸ்டமர் கேர் அசோசியேட், எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் மற்றும் CEO திரு.கவீந்திர மிஸ்ரா கூறினார். “சென்னை எங்களுக்கு ஒரு முக்கியமான சந்தையிடமாகும். சென்னையின் ஆற்றல் மிக்க சந்தையானது கருத்தாழமிக்க வாடிக்கையாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் ஈடு இணையற்ற ஷாப்பர்ஸ் ஸ்டாப் அனுபவத்தை அவர்களுக்கு வழங்குவதற்குமான ஒரு அற்புதமான மாபெரும் வாய்ப்பை வழங்குகிறது. மறுசீரமைக்கப்பட்ட சென்னை ஷாப்பர்ஸ் ஸ்டாப் விற்பனையகமானது, பிரீமியம் ஷாப்பிங் அனுபவத்திற்கான அணுகலை வழங்குவதில் எங்களுக்கிருக்கும் உறுதிப்பாட்டுக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது”
இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த மிஸ். ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார், “ஷாப்பர்ஸ் ஸ்டாப் பிராண்டானது என் வளர்ச்சியில் என் உடனிருந்த ஒரு புகழ்பெற்ற சின்னமாகும். மேலும் அற்புதமான பிராண்டுகள் மற்றும் நவநாகரீக ஆடம்பரப்பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பல உலகளாவிய பிராண்டுகளைத் தேடி இறுதியில் நான் சென்றடைய வேண்டிய ஒரு பிராண்ட் ஷாப்பர்ஸ் ஸ்டாப் ஆகும். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நாம் சென்னையில் காலடி எடுத்து வைக்கும் போது, இந்த உயிர்த்துடிப்போடுடனான நகரத்தை வரையறுக்கும் கலாச்சாரத்தின் செழுமையான நீண்ட பாரம்பரியம் எனக்கு நினைவுக்கு வருகின்றன.
மேலும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் அவர்களின் தனித்துவமான வழங்கல்களுடன் இந்த நகரத்தை மேலும் மேலும் வண்ணமயமாக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த அழகு ததும்பும் விற்பனையகம் இங்கு ஷாப்பின் செய்யும் அனைவரின் மகிழ்ச்சியான மற்றும் மனநிறைவான தருணங்களை ஒன்றிணைத்து ஒரு வெற்றிகரமான ஒளிவிளக்காக்த் திகழும் என்றுநான் நம்புகிறேன். சென்னையின் ஷாப்பர்ஸ் ஸ்டாப் ஸ்டோருக்கு வருகை தந்து, முன் எப்போதும் இல்லாத வகையில் ஸ்டைல் மற்றும் ஆடம்பர ஷாப்பின் பயணத்தைத் தொடங்குங்கள். ஷாப்பர்ஸ் ஸ்டாப்ல் நேர்த்தியின் அழகான வெளிப்பாடுகளுடன், கிளர்ச்சியூட்டும் ஃபேஷன் அனுபவத்தையும் பெறுங்கள்” என்றார்.
மேலும் படிக்க | பார்த்திபனின் புதிய முயற்சி! டீன்ஸ் படத்தின் இசைவெளியீட்டில் உலக சாதனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours