இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் துரை பாரதியை மாடியில் தள்ளிவிட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கீழே விழுந்த பாரதி ரத்த வெள்ளத்தில் கிடக்க துரை கீழே வந்து பார்க்க பாரதி மண்டபத்துக்குள் பாட்டு பாடி கொண்டிருக்க நடந்தது என்ன என்று தெரியாமல் பதறியடித்து ஓடுகிறான். இதெல்லாம் வாசுவின் ஆன்மாவின் வேலை என்பதும் தெரிய வருகிறது.
அடுத்ததாக லதா, கேசவ் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கிறது, கல்யாண மேடையில் பாரதி எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்க மரகதம் சொன்ன விஷயங்களால் லதாவின் அம்மா பாரதி எதுவும் செய்ய கூடாது, எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்.
மேலும் படிக்க | சௌந்தரபாண்டியை கிழித்தெடுத்த பரணி.. கனியால் கண்ணீர் விடும் ஷண்முகம்
தாலியை கொண்டு போய் எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்க சொல்ல பாரதி தட்டை வாங்க போகும் நேரத்தில் லதாவின் அமமா நீ இதையெல்லம் செய்ய கூடாது, வாழா வெட்டியாக இருக்கிற என்று பாரதி விதவை என்பதை மறைமுகமாக சொல்கிறாள்.இதனால் பாரதி மனமுடைந்து வெளியே ஓடி வந்து அழுகிறாள்.
அடுத்து ஆதி பாரதி கல்யாண மண்டபத்தில் இல்லாததை பார்த்து அவளை தேட நடந்த விஷயங்கள் தெரிய வந்து வெளியே வருகிறான், பாரதி அழுது கொண்டிருக்க அவளுக்கு ஆறுதல் சொல்லி கட்டாயப்படுத்தி மண்டபத்துக்குள் அழைத்து செல்கிறான். எதுக்காக பாரதியை வெளியே அனுப்பினீங்க? அவ நான் கட்டிக்க போறவன் என்று பாரதி நெற்றியில் குங்குமத்தை எடுத்து வைத்து நீ போய் எல்லா வேலையையும் பாரு என்று அனுப்பி வைக்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | இசையமைப்பாளர் டி.இமான் இசையில் இணையத்தைக் கலக்கும் “மாயோனே” பாடல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours