தங்கமகள்: “மத்தவங்க பேசுறதைப் பற்றி யோசிச்சா நம்ம லைஃப்ல அடுத்த ஸ்டெப் போகவே முடியாது!” – நீபா | Serial Actress Neepa’s Exclusive Interview about her career

Estimated read time 1 min read

“என்னை பொதுவெளியில் எப்ப பார்த்தாலும் `நீங்க காவலன்’ படத்துல வடிவேலு சார் கூட வருவீங்களே… அவங்க தானே?’னு கேட்பாங்க அப்படி இல்லைன்னா `மானாட மயிலாட’ பற்றிக் கேட்பாங்க. சீரியல் டெலிகாஸ்ட் ஆகி ரெண்டு நாளில் நாங்க குடும்பத்தோட பீச் போயிருந்தோம். அங்க என்னைப் பார்த்துட்டு முதன்முறையா ‘தங்கமகள்’ சீரியலில் நீங்கதானே பண்றீங்க?’னு கேட்டாங்க. ஆச்சர்யமா இருந்துச்சு. அதே அளவுக்கு சந்தோஷமாகவும் இருந்துச்சு!”

“நீங்க டான்ஸரும் கூட இப்ப அது சார்ந்து ஏதாவது ஒர்க் பண்றீங்களா?” எனக் கேட்கவும் தொடர்ந்து பேசினார்.

“இப்ப ஆன்லைனில் பசங்களுக்கு பரதநாட்டியம் கத்துக் கொடுத்துட்டு இருக்கேன். ஃபேமிலி சப்போர்ட் இல்லைன்னா எதுவுமே பண்ண முடியாது. கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் பெற்றோர்கள் சப்போர்ட் பண்ணணும். கல்யாணத்துக்குப் பிறகு கணவருடைய சப்போர்ட் ரொம்பவே முக்கியம். என் கணவரும் அவங்க வீட்ல உள்ளவங்களும் என்னையும், என் பேஷனையும் புரிஞ்சுகிட்டு எனக்கு சப்போர்ட் பண்றாங்க. அது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு. ஏன்னா, எல்லாருக்கும் இது மாதிரி அமையுறது இல்ல. ப்ளீஸ் கணவன்மார்களே… அவங்க அவங்க பொண்டாட்டிமார்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க. அவங்க அவங்களுடைய பேஷனை நோக்கிப் போகும்போது அவங்களுக்கு வழிவிட்டு சப்போர்ட் ஆக இருங்க!” என்றதும் “குழந்தைங்க கூட நேரம் செலவழிக்க முடியலைன்னு ஃபீல் பண்ணியிருக்கீங்களா?” எனக் கேட்டோம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours