Latest News GV Prakash Kumar Fight With Dhanush : தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக மட்டுமன்றி, பாடகராகவும் நடிகராகவும் வலம் வருபவர், ஜி.வி.பிரகாஷ் குமார். இவர், தனக்கும் நடிகர் தனுஷுக்கும் இருக்கும் நட்பு குறித்த சமீபத்திய நேர்காணலில் மனம் திறந்துள்ளார்.
இசையமைப்பாளர் டூ நடிகர்:
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், 2006ஆம் ஆண்டு வெளியான ‘வெயில்’ படம் மூலம் அறிமுகமானார். இவரது குடும்பமே இசை குடும்பம் என்பதால், இவருக்கும் இசை ஆர்வம் சிறுவயதிலேயே பற்றிக்கொண்டது. இதன் விளைவாக, அந்நியன் படத்தில் இடம் பெற்றிருந்த ‘காதல் யாணை’ பாடலை பாடினார். அப்படியே மெல்ல மெல்ல பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மெட்டு போட ஆரம்பித்த இவர், சில காலங்களுக்கு பிறகு நடிக்கவும் ஆரம்பித்தார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் முதன் முதலில் நடித்த படம், டார்லிங். காமெடி பேய் படமான இது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, ப்ரூஸ் லீ, கடவுள் இருக்கான் குமாறு என வரிசையாக காமெடி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட இசையமைக்கும் படங்கள் பெரிதாக ஹிட் அடிக்கின்றன என்றாலும், இவர் நடிப்பதை விடுவதாக இல்லை. இவர் நடிக்க வந்தே, கிட்டத்தட்ட 10 வருடங்கள் நிறைவடைய போகிறது.
தனுஷ்-ஜி.வி கூட்டணி:
தமிழ் சினிமாவில் உள்ள சூப்பர் ஹிட் கூட்டணிகளுள், ஜி.வி.பிரகாஷ் குமார், தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியும் ஒன்று. இவர்களின் கூட்டணியில் உருவான படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இவர்கள் பல படங்களில் இணைந்து பணிபுரிந்திருக்கின்றனர். தனுஷின் பொல்லாதவன் படத்திற்கு இசையமைத்த ஜிவி தொடர்ந்து அவரது ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன், மாறன், கேப்டன் மில்லர் என பல படங்களுக்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில்தான், நடிகர் தனுஷ் உடன் தனக்கு இருக்கும் நட்பு குறித்து வாய் திறந்து பேசியிருக்கிறார் ஜி.வி.
மேலும் படிக்க | தலைவர் 171 படத்தில் இணைந்த புது நடிகர்! அட இவரு பெரிய ஆளாச்சே..
6 வருடங்களாக பேசவில்லை..
நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், தனுஷ் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து ஆங்காங்கே அரசல் புரசலாக பேசப்பட்டிருந்தாலும் இது குறித்து இருவருமே வாய் திறக்காமல் இருந்தனர். தற்போது தனது பட ப்ரமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் ஜி.வி, ஒரு நேர்காணலில் தனுஷ் உடன் இருக்கும் உறவு குறித்து பேசியிருக்கிறார். ஒரு முறை தனக்கும் தனுஷிற்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக இருவரும் 6 வருடங்களாக பேசிக்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.
நட்பு குறித்து பேசிய ஜி.வி..
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு நண்பர் என்பவர், நமக்கு அனைத்து தருணங்களிலும் தூண் போல நிற்பவர். நாங்கள் எந்த பிரச்சனையை சந்தித்தாலும் அப்படி ஒருவருக்கொருவர் தூண் போல நின்று ஆதரவாக இருப்போம். நாங்கள் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்திருக்கிறோம்” என்று பேசியிருக்கிறார். மேலும், “ஒருவருடன் நெடுங்காலமாக நண்பராக இருக்கும் போது அதில் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும், தவறான புரிதல்களும் ஏற்படலாம். இதனால்தான் 6 வருடமாக பேசாமல் இருந்தோம். அதன் பிறகு இப்போது எங்களுக்குள் நல்ல உறவு உருவாகியிருக்கிறது” என்றும் கூறியிருக்கிறார்.
எப்போதும் சண்டை..
இதற்கு முன்னர் ஜி.வி.பிரகாஷ் கொடுத்திருந்த ஒரு பேட்டியில், தானும் தனுஷும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடுவோம் என்றும், அடிக்கடி தங்களுக்குள் சண்டை வந்தாலும் மீண்டும் சேர்ந்து கொள்வோம் என்றும் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க | “டியர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours