கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஜூன் மாதம் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு | kamal haasan starrer indian 2 movie release date announced

Estimated read time 1 min read

சென்னை: கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அத்துடன் ‘இந்தியன் 3’ படத்துக்கான படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாக கமல்ஹாசன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

பான் இந்தியா படமான இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா, ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. எனவே, அதற்குப் பிறகு இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பின் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

'+k.title_ta+'

'+k.author+'