திரையரங்க ரிலீஸுக்குப் பிறகு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி-யில் வெளியிடப்படவிருக்கும் இப்படத்தை இந்தியாவில் அப்படியே வெளியிட்டால் அது வலதுசாரி பார்வையாளர்களைப் புண்படுத்தும் என்பதற்காகக் காவி நிற பேனர்களைச் சிவப்பு நிறமாக மாற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சிலர் டிரெய்லர் வந்தவுடன் தரப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாகவே இது மாற்றப்பட்டது என்றும் தெரிவிக்கின்றனர். ‘மங்கி மேன்’ படத்தை அமெரிக்காவில் சிறப்புத் திரையிடலில் பார்த்த வெங்கி மாணிக்கம் என்ற இந்தியர், அந்த பேனர்கள் காவி நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாற்றியிருப்பதை உறுதி செய்திருக்கிறார்.
“ஆனால் கொடிகள் இன்னும் காவி நிறத்தில்தான் உள்ளன. அது பா.ஜ.க-வின் கொள்கையைப் பிரதிபலிப்பது போல இருக்கிறது. குறிப்பாக நிஜ வாழ்க்கை அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள் போன்ற சிலரைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதேபோல “Monkey Man’ என்ற பெயரும் சில காட்சிகளும் இந்தியக் கடவுளான அனுமனைக் குறிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
+ There are no comments
Add yours