6 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்
05 ஏப், 2024 – 13:31 IST
தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகி அதன்பிறகு இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். தற்போது அவர் நடித்து இசையமைத்துள்ள கள்வன் என்ற படம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவானா நடிக்க, பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனுஷ் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரிடத்தில் 6 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக தெரிவித்திருக்கிறார். நாங்கள் இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்ததால் இது போன்ற சண்டை ஏற்பட்டது. என்றாலும் ஒரு கட்டத்தில் மீண்டும் நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம். தற்போது ஒருவரது மனநிலையை ஒருவர் புரிந்து கொண்டதால் இனிமேல் நாங்கள் சண்டை போடுவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
+ There are no comments
Add yours