கோட் பட வாய்ப்பை கோட்டை விட்டேன் : வினீத் சீனிவாசன்

Estimated read time 1 min read

‘கோட்’ பட வாய்ப்பை கோட்டை விட்டேன் : வினீத் சீனிவாசன்

04 ஏப், 2024 – 11:53 IST

எழுத்தின் அளவு:


I-turned-down-the-offer-of-Goat-:-Vineeth-sreenivasan

மலையாள திரையுலகில் கடந்த 15 வருடங்களாக இயக்குனர், நடிகர் தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமையுடன் வெற்றிகரமாக வலம் வருபவர் வினீத் சீனிவாசன். பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் சீனிவாசனின் மகனான இவர் சீரான இடைவெளியில் குறிவைத்து வெற்றி படங்களை இயக்குவதில் வல்லவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘ஹிருதயம்’ என்கிற வெற்றி படத்தை கொடுத்த இவர் தற்போது ‘வருஷங்களுக்கு சேஷம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் பிரணவ் மோகன்லால், தயன் சீனிவாசன், நிவின்பாலி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தை இயக்குவதற்காக, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடிப்பதற்கு தன்னைத் தேடி வந்த வாய்ப்பை ஏற்க முடியாமல் போய்விட்டது என்கிற புதிய தகவலை கூறியுள்ளார் வினீத் சீனிவாசன்.

“கடந்த அக்டோபர் மாதம் என்னுடைய படத்தை இயக்கி வந்த சமயத்தில் தான் இயக்குனர் வெங்கட் பிரபு கோட் படத்திற்காக அழைத்தார். இதுவே வேறு ஒரு படத்தில் தான் ஒரு நடிகராக நடித்து வந்திருந்தால் எப்படியாவது அவர்களிடம் அனுமதி பெற்று வந்து கோட் படத்தில் நடித்திருப்பேன். ஆனால் நான் இயக்குனர் என்பதால் அதிலிருந்து விலகி வரும்போது மற்றும் நடிகர்களின் தேதிகள் அனைத்தும் வீணாகிவிடும் என்பதால் கோட் பட வாய்ப்பை ஏற்க முடியாமல் போனது” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் வினீத் சீனிவாசன்.

இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பாக வெங்கட் பிரபுவின் சரோஜா திரைப்படம் வெளியான சமயத்தில் சென்னையில் அந்த படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில், தனது சக நண்பர்களிடம், ஒரு இயக்குனர் புதுமுக நடிகர்களை வைத்து தொடர்ந்து எப்படி ஹிட் கொடுக்கிறார் பாருங்கள்.. நம் மலையாளத்தில் ஏன் இப்படி தர முடியவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு அவரது நண்பர் ஒருவர் நீதான் இயக்குனராக வேண்டும் என முயற்சித்து வருகிறாயே நீயே இதுபோன்று முயற்சி செய்யலாமே என்று பதிலுக்கு கேட்டார். அதன் விளைவாகத்தான் புதுமுகங்களை வைத்து மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்கிற படத்தை துவங்கியதாகவும் அதில் நடித்த நடிகர்களின் கூட்டணியை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார் வினீத் சீனிவாசன்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours