“சிங்கம்… சிங்கம்’ என மிரட்டும் பிஜிஎம்களாக இருக்கட்டும்… ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’ என அடித்து துவம்சம் செய்யும் ஃபைட்களாக இருக்கட்டும்… எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் ஃபாஸ்ட்டாக மூவ் ஆகும் காட்சிகளாகட்டும்… மேக்கிங்கால் மிரட்டுகிறவர் ஹரி. அவரின், மகன் ஸ்ரீராம் ஹரி இயக்கி, நடித்திருக்கும் ‘ஹம்’ (Hum) படம் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. லயோலா கல்லூரியில் விஸ்காம் ஃபைனல் இயர் படித்துக்கொண்டே இயக்கத்தில் களமிறங்கியிருக்கிற ஶ்ரீராம் ஹரியிடம் வாழ்த்துகளுடன் பேசினேன். மிக இயல்பாக பேசுகிறார்.
“சின்ன வயசுல இருந்தே அப்பாகூட ஷூட்டிங்கெல்லாம் போயிருக்கேன். அங்க நடக்குற விஷயங்களை எல்லாம் அப்சர்வ் பண்ணியிருக்கேன். அதுமட்டுமில்லாம, படம் பார்க்கணும்னு வீட்டுல கேட்டா நோ சொன்னது கிடையாது. அப்பா, அம்மா ரெண்டு பேருமே ரொம்ப ஃப்ரெண்ட்லி.
சினிமா இன்ட்ரஸ்ட் இருந்ததாலதான் லயோலா காலேஜ்ல விஸ்காம் சேர்ந்தேன். இதை பண்ணாத, அதை பண்ணாதன்னு என்னைக்குமே என் விருப்பத்துக்கு அப்பா, அம்மா தடை சொல்லமாட்டாங்க. ‘உனக்கு பிடிச்சிருக்கா… அதை செய்’ அப்படின்னு அந்த விஷயத்துக்கு எந்தளவுக்கு என்கரேஜ் பண்ண முடியுமோ அந்தளவுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. என் மேல இவ்ளோ நம்பிக்கை வெச்சு எல்லாத்துக்கும் துணை நிற்கும் அப்பா, அம்மாவுக்கு எப்பவுமே நான் உண்மையாவும் நன்றியோடவும் இருக்கணும்னு நினைக்கிறேன்.
+ There are no comments
Add yours