நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் “GOAT’ படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை நிராகரித்ததற்கான காரணத்தை மலையாள நடிகரும் இயக்குநருமான வினீத் சீனிவாசன் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பகிர்ந்த அவர், ” வெங்கட் பிரபு சார் விஜய்யின் GOAT படத்தில் நடிக்க என்னை அழைத்தார். அப்போது நான் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தை பிஸியாக இயக்கி நடித்துக்கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டேன். வெங்கட் பிரபு என்னிடம் கேட்டபோது, `இந்த வாய்ப்பை விட விரும்பவில்லை, ஆனாலும் எனக்கு வேறு வழியில்லை!’ என்றேன்.
+ There are no comments
Add yours