நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார் | comedy actor visweswara rao passed away

Estimated read time 1 min read

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 62.

பாலா இயக்கத்தில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பாவாக நடித்திருப்பார் விஸ்வேஷ்வர ராவ். தமிழ், தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக புகழ்பெற்றவர். தனது 6 வயதில் இருந்தே நடிக்க தொடங்கிவிட்ட விஸ்வேஷ்வர ராவ் இதுவரை 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா தவிர்த்து சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், உடல்நல பாதிப்பு காரணமாக காலமான விஸ்வேஷ்வர ராவ் உடல் சென்னை சிறுசேரியில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கின்றன.

'+k.title_ta+'

'+k.author+'