சென்னை: இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. வித்தியாசமான கதைக்களம் மூலம் கவனம் ஈர்க்கும் பார்த்திபன் இந்தப் படத்திலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகி உள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார். கெவ்மிக் ஆரி ஒளிப்பதிவு, ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பு. கடந்த 2022-ம் ஆண்டு பார்த்திபன் நடித்து இயக்கிய திரைப்படம் ‘இரவின் நிழல்’. சிங்கிள் ஷாட்டில், நான் லீனியராக உருவானது. அதற்கு அடுத்ததாக இந்தப் படம் உருவாகி உள்ளது.
டீசர் எப்படி? – டீன்ஸ் படத்தின் டீசரின் முதல் ஷாட் 500 வருட பாழுங்கிணற்றில் உள்ள பேய் குறித்தும், அதனை எழுப்புவது குறித்த வசனத்துடனும் தொடங்குகிறது. குழந்தைகளை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி உள்ளது. த்ரில்லர் ஜானர் என்பது தொடக்கத்திலேயே தெரிகிறது. நகரப் பகுதியில் இருந்து கிராம நோக்கி கதை நகர்வதாக தெரிகிறது.
அதற்கு தகுந்தபடி சாலை, பேருந்து, கோயில் என வெவ்வேறு ஷாட்கள் மூலம் கிராமத்துக்கு செல்கிறது. ஆடு, கோழி, பிளேக் மேஜிக், குழந்தைகள் பட்டாளம், மண்டை ஓடு என அடுத்தடுத்த ஷாட்கள் நகர்கிறது. ‘தெளியும்… விரைவில்’ என டீசர் நிறைவடைகிறது. படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை முதலியவை தொழில்முறை நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டீசர் வீடியோ லிங்க்..