Latest Cinema News Actor Dhanush Salary For Acting In Ilaiyaraaja Biopic Directed By Arun Matheswaran

Estimated read time 1 min read

Actor Dhanush Salary In Ilaiyaraaja Biopic : தமிழ் ரசிகர்களால் ‘இசைஞானி’ என்று அழைக்கப்படுபவர், இளையராஜா. இந்திய திரையுலகில் சுமார் அரைநூற்றாண்டாக தொடரும் இவரது சாதனை அவ்வப்போது பிரபலங்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வந்தாலும், அதை இன்னும் பெரிய அளவிற்கு கொண்டு செல்ல இவரது வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் தனுஷ், இதில் ஹீரோவாக நடிக்கிறார். 

மேலும் படிக்க | Daniel Balaji :தனது இறப்பை முன்கூட்டியே கணித்த டேனியல் பாலாஜி! என்ன சொன்னார் தெரியுமா?

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு:

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை அருண் மாத்தேஸ்வரன் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் திறப்பு விழா சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், தனுஷ் மற்றும் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இளையராஜாவை பாராட்டி பேசிய பிரபலங்கள், இப்படத்தில் பணிபுரிய ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாக கூறினர். மேலும், இதனை இயக்கும் அருண் மாத்தேஸ்வரன், எந்த வித அழுத்தமும் இல்லாமல் தனக்கு எப்படி தோன்றுகிறதோ அது போல இப்படத்தை இயக்க வேண்டும் என கமல்ஹாசன் கூறினார். 

இரண்டு பாகங்களாக தயாராகிறதா?

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம், இரண்டு பாகங்களாக உருவாகுவதாக கூறப்படுகிறது. 50 வருட வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர். அது மட்டுமன்றி, முதல் பாகத்தில் இளையராஜாவின் இளமை வாழ்க்கை காண்பிக்கப்பட உள்ளதாகவும், அடுத்த பாதியில் அவர் செய்த சாதனைகளை காண்பிக்கப்பட உள்ளதாகவும் திரை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

தனுஷ் வாங்கிய சம்பளம்..

டாப் கோலிவுட் நடிகர்களின் லிஸ்டில் மட்டுமல்ல, திறமையான நடிகர்களின் பட்டியலிலும், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவராகவும் இருக்கிறார், தனுஷ். தமிழ் திரையுலகை தாண்டி இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பிற மொழிகளிலும் நடித்து ட்ரெண்ட் செட்டராக இருக்கிறார். இவருக்கு, ஒரு படத்திற்கு 20 முதல் 30 கோடி வரை சம்பளம் தற்போது வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இளையராஜாவாக அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்காக அவர் சுமார் ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் பாகத்திற்கு 50 கோடியும், அடுத்த பாகத்திற்கு 50 காேடியும், மாெத்தமாக அவர் ரூ.100 கோடி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 

“அவர் வாழ்க்கை வரலாறிலும் நடிக்க ஆசை..”

தனுஷ், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது பேசிய செய்தி, இணையத்தில் வைரலாக மாறியது. தான், இரண்டு லெஜண்ட்களின் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், அதில் ஒருவர் இளையராஜா என்றும் இன்னொருவர் ரஜினிகாந்த் என்றும் கூறினார். ரஜினி, தனுஷின் முன்னாள் மாமனார் என்பதால் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிப்பாரா என்பது தெரியவில்லை. இது குறித்து இணையத்தில் ரசிகர்கள் பரவலாக பேசி வந்தனர். 

மேலும் படிக்க | இளையராஜாவின் biopic-ல் இவர்கள் நடித்தால் எப்படியிருக்கும்? ஒரு சின்ன கற்பனை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours