காங்குக்கும் மெட்டல் ஆர்ம் வேண்டுமா, இங்கயே இருக்கு, சாப்பிட பிரியாணி வேணுமா, இங்கயே இருக்கு என்பதாக ஹாலோ எர்த்தை ஸ்டோரேஜ் ரூம் கணக்காக டீல் செய்திருக்கிறார்கள். இப்படியான குறைகளை மறக்கடிக்கக் கடைசி 30 நிமிட ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். அது எதிர்பார்த்ததைப் போலவே சிறப்பான திரை அனுபவமாக மாறியிருக்கிறது. (காட்ஸில்லா மீது காங் ஃபுட் போர்டு அடிப்பதை எல்லாம் பார்க்கலாம்.)
மொத்தத்தில், தற்போது ஹாலிவுட்டின் மினிமம் கேரண்டி ப்ரான்சைஸாக உருவெடுத்திருக்கும் மான்ஸ்டர்வெர்ஸில் மற்றுமொரு சராசரி படமாக வந்திருக்கிறது இந்த ‘காட்ஸில்லா அண்ட் காங்’.
+ There are no comments
Add yours