துபாய்: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் ப்ளூவாட்டர்ஸில் திறக்கப்பட்டது. பலரும் சிலைக்கு அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
அல்லு அர்ஜுனின் மெழுகு சிலையை உருவாக்க, கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட அளவீடுகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் நுட்பமான பல விவரங்கள் சேகரிக்கப்பட்டு இந்த சிலையான வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘புஷ்பா’ படத்தின் அவருடைய தனித்துவ உடல்மொழியை பிரதிபலிக்கும் வகையில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸில் (Madame Tussauds) மெழுகு சிலை அமையப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்.
இது குறித்து அல்லு அர்ஜுன் கூறுகையில், “நான் மேடம் டுசாட்ஸுக்குச் சென்றிருக்கிறேன். அது எனக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்தது. இப்போது எனக்கு ஒரு மெழுகு சிலை வைத்திருக்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. மிக்க நன்றி.
என்னுடைய இந்த மெழுகு சிலை, கிட்டத்தட்ட என்னைக் கண்ணாடியில் பார்ப்பது போல உள்ளது” என்றார்.அல்லு அர்ஜூனின் மெழுகு சிலை திறப்பு விழா நிகழ்வின்போது அவரது குடும்பத்தினரும் உடனிருந்தனர்.
+ There are no comments
Add yours