நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம்

Estimated read time 1 min read

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம்

30 மார், 2024 – 08:22 IST

எழுத்தின் அளவு:


Actor-Daniel-Balaji-dies-suddenly-due-to-heart-attack

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 55. சென்னை, புரசைவாக்கத்தில் வசித்து வந்த அவருக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டது, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார்.

சென்னை, அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்கம் படித்தவர். அவர் இயக்கிய ‘டிப்ளமோ’ படத்திற்காக கோல்டு மெடல் விருதைப் பெற்றார். அந்தப் படத்தைப் பார்த்த மறைந்த நடிகர் விஜயகாந்த், டேனியல் பாலாஜியை அழைத்து இயக்குவதற்கு வாய்ப்பளித்தார். ஆனால், விஜயகாந்த்துக்குப் பொருத்தமான கதை தன்னிடம் இல்லை என அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் பாலாஜி.

பின்னர் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் டிவியில் ஒளிபரப்பான ‘சித்தி’ என்ற டிவி தொடரில் ‘டேனியல்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன்பின் ‘டேனியல் பாலாஜி’ என்றே பிரபலமானார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘காக்க காக்க, வேட்டையாடு விளையாடு’, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘பொல்லாதவன்’ ஆகிய படங்களில் அவருடைய கதாபாத்திரமும் நடிப்பும் அதிகம் பேசப்பட்டது. தொடர்ந்து ‘வை ராஜா வை, பைரவா, மாயவன், வட சென்னை, பிகில்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சிறந்த நடிகராக இருந்தாலும் அதிகமான வாய்ப்புகளை அவர் பெற்றதில்லை. தமிழ் தவிர, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். மறைந்த நடிகர் முரளியின் அம்மாவும், டேனியல் பாலாஜியின் அம்மாவும் சகோதரிகள்.

சென்னை, ஆவடி அருகே அம்மன் கோயில் ஒன்றை அவரது சொந்த செலவில் கட்டியுள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கண்கள் தானம்
டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக டேனியல் பாலாஜி மறைவு செய்தி கேட்டு இயக்குனர்கள் கவுதம் மேனன், வெற்றிமாறன், அமீர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மருத்துவமனைக்கே சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் ஓட்டேரி பகுதியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யபட உள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours