`தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் இவர் கதாபாத்திரம் வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடரில் அவர் இறந்தது போலக் காட்சிகள் வந்ததும் அவருடைய ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் செய்வதாக கமெண்ட் செய்து கொண்டிருந்தனர். அந்தத் தொடருக்குப் பிறகு தமிழில் வேறொரு சீரியல் மூலம் மீண்டும் அக்ஷிதா என்ட்ரி கொடுப்பார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்நிலையில் அக்ஷிதாவிற்கும் ப்ரீத்தம் சுரேஷ் என்பவருக்கும் நேற்று திருமணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ப்ரீத்தம் சுரேஷ் அசிஸ்டென்ட் டைரக்டராகவும், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராகவும் இருக்கிறாராம். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவீட்டு சம்மதத்துடன் இவர்களுடைய நிச்சயதார்த்த நிகழ்வு கூர்க்கில் நடைபெற்றிருக்கிறது.
+ There are no comments
Add yours