டைம் ட்ராவல் கதை? – ‘ரஜினி 171’ அறிவிப்பு போஸ்டர் எப்படி? | Rajinikanth adds bling to the first look of Lokesh Kanagaraj next

Estimated read time 1 min read

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் அறிவிப்பு டீசர் ஏப்ரல் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினி கையில் கோல்டு கலர் கடிகாரங்கங்கள் செயினைப்போல பின்னப்பட்டு உள்ளன.

ரஜினிக்கு பின்புறமும் நேரம் காட்டும் கருவி இருப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இப்படம் லோகேஷின் நீண்ட நாள் கனவான ‘இரும்புக் கை மாயாவி’ படமா? அல்லது டைம் ட்ராவல் படமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

'+k.title_ta+'

'+k.author+'