சின்னத்திரை நடிகையாக பரிச்சயமான முகம் ஶ்ரீதேவி அசோக். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `விக்ரம் வேதா’ தொடரிலும், `பொன்னி’ தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு சித்தாரா என்கிற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை ஶ்ரீதேவி ஏற்கெனவே அவருடைய ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். சமீபத்தில் அவருடைய வளைகாப்பு நிகழ்வு நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்வில் நடிகை நேஹாவும், ஸ்ருதி சண்முகப்பிரியாவும் ஆரம்பம் முதலே பங்கெடுத்து தன் தோழியின் நிகழ்வைச் சிறப்பித்திருக்கிறார்கள். மேலும், ‘பொன்னி’, ‘விக்ரம் வேதா’ டீம், `தென்றல்’ ஸ்ருதி ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டு அவரை வாழ்த்தியிருக்கிறார்கள். வாழ்த்துகள் ஶ்ரீதேவி அசோக்!
+ There are no comments
Add yours