அரவிஷ் – ஹரிகா: `திருமகள்' தொடர் நாயகியை கரம் பிடித்த `சுந்தரி' தொடர் நாயகன்!

Estimated read time 1 min read

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `சுந்தரி’ தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர் அரவிஷ். இவருக்கும் `திருமகள்’ தொடர் கதாநாயகி ஹரிகாவிற்கும் இன்று கோயம்புத்தூரில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

அரவிஷ் – ஹரிகா

அரவிஷ் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களுடைய திருமணம் அங்கு நடைபெற்றுள்ளது. ஹரிகா ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்தவர். தெலுங்குத் தொடர்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹரிகா, `திருமகள்’ தொடரின் மூலம் தமிழ் சீரியல் உலகில் என்ட்ரியானார். ஹரிகாவும் அரவிஷூம் காதலித்து வந்த நிலையில் அவர்களே வெளிப்படையாக தங்கள் காதலை சமூகவலைதளப் பக்கங்களில் அறிவித்திருந்தனர்.

இருவரும் சேர்ந்து ரீல்ஸ்களையும் பதிவிட்டு வந்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் இன்று அவர்களுடைய திருமணம் நடைபெற்றிருக்கிறது. நேற்று (26.03.2024) அவர்களுடைய `AravisHarika’ யூடியூப் சேனலில் அவர்களுடைய நிச்சயதார்த்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

`அண்ணே கல்யாணம்’ என்கிற கேப்ஷனுடன் இந்தத் திருமணத்திற்காகப் புறப்படும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் கேப்ரியல்லா. இருவரும் சின்னத்திரை நடிகர்கள் என்பதால் பல நட்சத்திரங்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

அரவிஷ் – ஹரிகா

காதலர்களாக வலம் வந்தவர்கள் இனி கணவன் – மனைவியாக அடுத்தகட்டத்திற்கு அடி எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களைப் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

வாழ்த்துகள் அரவிஷ் – ஹரிகா!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours