மாரி செல்வராஜிற்கு நோ சொன்னாரா இளையராஜா : இணையத்தில் வைரல்
23 மார், 2024 – 15:46 IST
இசை அமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு ‘இளையராஜா’ என்ற பெயரிலேயே தயாராகிறது. இதில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய வன்முறை படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேசமயம் இந்த படத்தை முதலில் மாரி செல்வராஜ் தான் இயக்க இருந்ததாகவும், ஆனால் இளையராஜா வேண்டாம் என கூறிவிட்டதாகவும் வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. மேலும் வெற்றிமாறனும் இயக்குனர் லிஸ்ட்டில் இருந்தாராம். ஆனால் அவரையும் இளையராஜா மறுத்துவிட்டாராம். அதன்பிறகுதான் அருண் மாதேஸ்வரன் இயக்குனராகி இருக்கிறார்.
+ There are no comments
Add yours