சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கள்வன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கள்வன்’. இந்த திரைப்படத்தின் கதையை ரமேஷ் அய்யப்பன் மற்றும் பி.வி.ஷங்கர் எழுதியுள்ளனர்.
பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – கிராமம், காடு, யானை என பயணிக்கும் ட்ரெய்லர் படத்தின் கதையை கணிக்க முடியாத வகையில் வெட்டப்பட்டுள்ளது. யானையை வைத்து காரியம் சாதிக்க ஜி.வி.பிரகாஷும், தீனாவும் திட்டமிடுகிறார்கள். அது என்ன என்பது குறித்த எந்த விவரமும் இல்லை. தந்தம் கடத்தல் அல்லது வேறு எதாவது சட்டவிரோத செயல்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
பாரதிராஜா வந்து செல்கிறார். அவருக்கான முக்கியத்துவமான காட்சிகள் இல்லை. புதிராகவே நகரும் ட்ரெய்லரில் சுவாரஸ்யமான காட்சிகளோ, கதையின் போக்கை கணிக்கும் வசனங்களோ எதுவும் இடம்பெறவில்லை. பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ: