25 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி! | AR Rahman And Prabhu Deva Join Forces After 25 Years

Estimated read time 1 min read

சென்னை: புதிய படம் ஒன்றுக்காக 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபுதேவா நடிப்பில் கடைசியாக ‘பகீரா’ படம் வெளியானது. தற்போது அவர் விஜய்யுடன் இணைந்து ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேட்ஸ்’ என 90-களில் இந்தக் கூட்டணியில் வெளியான படங்களும், பாடல்களுக்கும் ஹிட்டடித்தன. கடைசியாக 1997-ல் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தனர். தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இப்படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 6-வது முறையாக இணைவதை குறிக்கும் வகையில் #ARRPD6 என இப்படத்துக்கு தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் பிரபுதேவாவின் ‘முக்காலா முக்காபுலா’ பாடலின் ஸ்டேப்பும், பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் படமும் இருப்பது போல வடிவமைப்பட்டுள்ளது.

'+k.title_ta+'

'+k.author+'