தியேட்டர் டு ஓடிடி
மறக்குமா நெஞ்சம் (தமிழ்) – Amazon Prime Video
ராகோ.யோகேந்திரன் இயக்கத்தில் ரக்ஷன், தீனா, மலினா, ‘பிராங்க் ஸ்டார்’ ராகுல், ஸ்வேதா வேணுகோபால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மறக்குமா நெஞ்சம்’.
பத்து ஆண்டுகளுக்கு முன் 12ம் வகுப்புப் படித்தவர்கள் எழுதிய தேர்வில் நடந்த சில குளறுபடிகளால் மீண்டும் அதே பள்ளியில் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற சூழல் ஏற்படுகிறது. அப்படி மீண்டும் இணைந்து படிக்கும் அலுமினிகளின் அலப்பறைகளும், நாஸ்டாலஜிக்கானத் தருணங்களும்தான் இதன் கதை. இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Oppenheimer (ஆங்கிலம்) – Jio Cinema
`இன்டர்ஸ்டெல்லார்’, `இன்செப்ஷன்’, `தி டார்க் நைட் டிரைலாஜி’, `தி பிரஸ்டீஜ்’ போன்ற பிரமிக்க வைக்கும் திரைப்படங்களை எடுத்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்தப்படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. சமீபத்தில் 7 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. இத்திரைப்படம் ஆங்கிலம், இந்தி உள்ளிட மொழிகளில் ‘Jio Cinemas’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையைக் கதைகளமாக வைத்து எடுக்கப்பட்டது இப்படம். இதில் அமெரிக்க அணு சக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் கிலியன் மர்பி நடிக்கிறார். இதுதவிர ‘அயர்ன்மேன்’ புகழ் ராபர்ட் டௌனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பக் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கின்றனர்.
+ There are no comments
Add yours