தனுஷின் அடுத்த படத்தின் அப்டேட் ஒன்று இன்று பகல் வெளிவருவதால் இப்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியாகிவிட்டனர் தனுஷின் ரசிகர்கள். கிடாரின் பின்னணியில் காவிய பயணம் ஆரம்பமாகிறது என அறிவித்துள்ளார் தனுஷ்.
சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ் இப்போது “குபேரா’வில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவரது 50வது படமான ‘ராயன்’ ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று அசத்தலான அறிவிப்பு ஒன்று வெளியாகவுள்ளது. இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள்…
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது என்றும், இசைஞானியாக தனுஷ் நடிக்கிறார் என்றும் தகவல்கள் ஏற்கெனவே வெளியாகின. இந்தப் படத்தை பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்குகிறார் என்றனர். இதற்கிடையே தனுஷின் லைன் அப்பில் ‘கர்ணன்’ படத்திற்குப் பின் மாரி செல்வராஜ், ‘கேப்டன் மில்லர்’ படத்தை அடுத்து அருண்மாதேஸ்வரனுக்கு ஒரு படம் என அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின. அந்த வகையில் இன்று வெளியாகும் அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
ஆம், இளையராஜாவின் பயோபிக், படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகிறது. இதற்கான படப்பூஜை இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இளையராஜாவின் தீவிர ரசிகரான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, படக்குழுவினரை வாழ்த்துகிறார்.
ஆனால் இளையராஜா பயோபிக் படத்தை பால்கி இயக்கவில்லை, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இளையராஜா, அருண் மாதேஸ்வரன் சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் நடந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று பயோபிக் அறிவிப்பு வெளியாகிறது என்கிறார்கள்.
+ There are no comments
Add yours