அயோத்தியில் பிரியங்கா சோப்ரா சாமி தரிசனம்
21 மார், 2024 – 14:42 IST
இந்திய நடிகையாக இருந்து தற்போது ஹாலிவுட்டிலும் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் பிரியங்கா சோப்ரா. அவ்வப்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இருக்கிறார். தற்போது அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்ட பிரியங்கா சோப்ரா 2018ம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மால்டி மேரி என்ற மகள் உள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பிறகு அந்த கோவில் இந்திய சுற்றுலா மற்றும் ஆன்மிக ஸ்தலத்தில் முன்னணியில் உள்ளது. இந்தியா வரும் பலரும் குறிப்பாக இந்துக்கள் அயோத்திக்கு செல்வதை ஆன்மிக கடமையாக கருதுகிறார்கள். அந்த வரிசையில் பிரியங்கா சோப்ராவும் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நேற்று அயோத்திக்கு வந்தார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது.
“இது எனது தனிப்பட்ட பயணம், அதற்கு தனிப்பட்ட காரணங்கள் உள்ளது” என்றார் பிரியங்கா சோப்ரா.
+ There are no comments
Add yours