இளையராஜா வாழ்க்கை படம் துவக்கம் : தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்

Estimated read time 1 min read

இளையராஜா வாழ்க்கை படம் துவக்கம் : தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்

20 மார், 2024 – 12:22 IST

எழுத்தின் அளவு:


Dhanush-in-Ilayaraja-Life-Story-:-Directed-by-Arun-Matheswaran

இளையராஜாவின் வாழ்க்கை கதையில் உருவாகும் படத்தில் அவரது வேடத்தில் தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை சென்னையில் நடந்தது.

‛அன்னக்கிளி’ படத்தில் அறிமுகமாகி இசை உலகின் ராஜா என பெயர் எடுத்தவர் ‛இசைஞானி’ இளையராஜா. 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர் இன்றும் பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். இவரது வாழ்க்கை படமாக உருவாவதாகவும் அதில் தனுஷ் நடிப்பதாகவும் நீண்டகாலமாகவே பேச்சுகள் வந்தன. தற்போது அது நிஜமாகி உள்ளது. நேற்று தனுஷ், ‛‛கிடாரின் பின்னணியில் காவிய பயணம் துவங்குகிறது” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் படத்தின் பூஜை மற்றும் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரமாண்டமாய் நடந்தது. இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை ஏற்கனவே தனுஷை வைத்து ‛கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இளையராஜாவே இசையமைக்கிறார். படத்திற்கு இளையராஜா என்றே பெயர் வைத்துள்ளனர்.

படத்தின் துவக்க விழாவில் தனுஷ், அருண் மாதேஸ்வரன் தவிர்த்து இளையராஜா, கமல்ஹாசன், கங்கை அமரன், சந்தானபாரதி, ஆர்வி உதயகுமார், வெற்றிமாறன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் பங்கேற்றனர். ஆகஸ்ட் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours