சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் பெற்ற அல்லு அர்ஜுன்
21 மார், 2024 – 10:49 IST
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், ‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். தற்போது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற உள்ளது. அங்கு படப்பிடிப்புக்காக வாகனங்களை ஓட்ட வேண்டிய காட்சிகளில் அல்லு அர்ஜுன் நடிக்க வேண்டி உள்ளதாம். அதற்காக எந்தவிதமான சட்ட சிக்கல்களும் வந்துவிடக் கூடாது என சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பித்திருந்தார் அல்லு அர்ஜுன். அந்த லைசென்ஸை கைரதாபாத் ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொண்டிருக்கிறார்.
ஆர்டிஓ அதிகாரிகளை சந்தித்து அதற்குரிய ஆவணங்களில் கையொப்பமிட்டு லைசென்ஸைப் பெற்றுள்ளார் அல்லு அர்ஜுன். எந்த பிரபலமாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும் லைசென்ஸை நேரில் சென்று பெறுவதே சட்டவிதி முறை. அதன்படியே அல்லு அர்ஜுனும் சென்று அதை வாங்கியுள்ளார். தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் கைரதாபாத் ஆர்டிஓவில்தான் லைசென்ஸ் வாங்கியுள்ளார்கள்.
+ There are no comments
Add yours