சென்னை: சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பீரியட் டிராமா கதைக்களத்தில் பிரமாண்டமான காட்சி அமைப்புகளுடன் படம் உருவாகியிருப்பதை டீசர் உணர்த்துகிறது. பிணங்கள், ரத்தம், சண்டைக்காட்சிகள், ஆக்ரோஷம், போர் என மொத்த டீசரும் அதிரடியாக உள்ளது.சூர்யாவின் அறிமுகமும் தோற்றமும், ஈர்க்கும் அளவுக்கு இணையாக பாபி தியோலின் மிரட்டும் என்ட்ரி படத்தின் மீதான ஆவலைக் கூட்டுகிறது.
அதேபோல தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை தனித்து தெரிகிறது. இறுதியில் பாபி தியோலும், சூர்யாவும் கத்திக்கொண்டு ஆக்ரோஷமாக நிற்கும் ஒற்றை ப்ரேம் அட்டகாசம். டீசர் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
கங்குவா: சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஃபேன்டஸி, முன்ஜென்மம், மறுபிறவி உள்ளிட்ட அம்சங்கள் இப்படத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது. டீசர் வீடியோ: