ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்தே ‘பிக் பாஸ் கொண்டாட்டம்’ என்ற இன்னொரு ஷோவைக் கொண்டு வந்து விடுவது விஜய் டிவியின் வழக்கம். பிக் பாஸ் 7வது சீசன் முடிந்து இரு மாதங்களாகியும் அந்தக் கொண்டாட்டத்தைக் காணோமே என பி.பா. ரசிகர்கள் தேடிக் கொண்டிருந்த நிலையில் அந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சி, கடந்த சனிக்கிழமை சென்னை பூந்தமல்லியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் அதே செட்டில் வைத்து ஷூட் செய்யப்பட்டிருக்கிறது.
அடுத்த சில தினங்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிற இந்த ‘பிக் பாஸ்’ கொண்டாட்டத்தின் ஹைலைட்ஸ் இங்கே…
* பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சில போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொள்ளவில்லை என்பது நினைவிருக்கலாம். பிரதீப் ஆண்டனி, எழுத்தாளர் பவா செல்லத்துரை, அன்னபாரதி ஆகிய சிலர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு பிக் பாஸ் தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் அன்னபாரதி பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். பவா செல்லத்துரை, பிரதீப், யுகேந்திரன், ஐஷு ஆகியோர் இந்த நிகழ்ச்சியிலும் மிஸ்ஸிங்தான்.
* பிரதீப் வராததற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததே. நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய போதே அவருக்கும் சேனலுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். எழுத்தாளர் பவா செல்லத்துரையும் ஆர்வமின்மை காரணமாகவே கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது. யுகேந்திரன் மலேசியாவிலிருப்பதால் வரவில்லை என்கிறார்கள்.
* ஐஷு நிகழ்ச்சிக்கு எப்படியும் வருவார் என பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர் ஆப்சென்ட்டானது அவர்களுக்கு ஏமாற்றமே! பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்த போது நிக்சனுடனான அவரின் நட்பு, சர்ச்சையைக் கிளப்பியது நினைவிருக்கலாம். ஐஷுவின் குடும்பத்தினர் பிக் பாஸ் செட்டுக்கே சென்று அவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியில் அனுப்பி விடுமாறு கேட்டதெல்லாம் நடந்தது. கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் நிக்சன் கலந்து கொள்வார் என்பதால் ஐஷு நிகழ்ச்சிக்குச் செல்வதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை என்கிறார்கள்.
* கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு இந்த நிகழ்ச்சியிலுமே பல டாஸ்குகளை வைத்து, பல விருதுகளை வழங்கினார்களாம்.
* மாயா, பூர்ணிமா கேங் பழைய அதே உற்சாகத்துடன் கலந்து கொள்ள, ஆடியன்ஸ் தரப்பிலிருந்து இவர்களுக்கே கைதட்டல்கள் நிறைய வந்திருக்கின்றன. இதனால் ஒருகட்டத்தில் கடுப்பாகி விட்டாராம் கூல் சுரேஷ்! ‘இங்கயும் பி.ஆர். ஒர்க்கா என்ன’ முணுமுணுத்திருக்கிறார். இதெல்லாம் ஒளிபரப்பில் வருமா என்பது தெரியவில்லை.
* டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் சார்பாக எனச் சில பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
* நிகழ்ச்சியில் என்டர்டெய்ன்மென்டாக மதுரை முத்து மற்றும் ராமரின் நகைச்சுவையும் இடம்பெற்றிருக்கிறது. நிக்சனின் நடனமும் இருந்ததாம்.
* நிகழ்ச்சியின் ஹைலைட் விசித்ரா – தினேஷ் எபிசோடுதான் என்கிறார்கள். அதாவது நிகழ்ச்சியின் க்ளைமாக்ஸில் யாராவது யாருக்காவது ஏதாவது சொல்ல விரும்புறீங்களா எனக் கேட்கப்பட்டதும், விசித்ரா தினேஷிடம் ‘சாரி’ கேட்க விரும்புவதாகச் சொன்னாராம்.
“அந்த வீட்டுல இருந்தப்ப அவர்கிட்ட நடந்துகிட்ட சில முறைக்காக நான் ‘சாரி’ கேட்டுக்கறேன்” என விசித்ரா சொல்ல, தினேஷிடம் அதற்குப் பதில் ரியாக்ஷன் கேட்கப்பட்டிருக்கிறது. “எந்த விஷயம்னு குறிப்பிடாம பொத்தாம் பொதுவா சாரி சொல்லிட்டாங்க. அவங்க என்னைப் பேசின சில வார்த்தைகளுக்கும் விஷயங்களுமே இப்ப காலாவதி ஆகிடுச்சுனு சொல்லலாம். ‘சாரி’ன்னு ஒருத்தங்க சொன்ன பிறகு இதுல பேசறதுக்கு வேற என்ன இருக்கு” என விஷயத்தை முடித்து வைத்திருக்கிறார் தினேஷ்.
+ There are no comments
Add yours