2012 ஆம் ஆண்டு நடிகர் சையத் அலிகானை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். தற்போது சினிமா, விளம்பரம் என பிஸியாக நடித்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் ரசிகர்களுடன் உரையாடிய கரீனா கபூர் தென்னிந்திய சினிமாவில் நடிக்கவிருப்பத்தை உறுதி செய்திருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “முதன்முறையாக, மிகப்பெரிய தென்னிந்திய படம் ஒன்றில் நடிக்கிறேன். பான் இந்தியா படமான இதன் படப்பிடிப்பு எங்கு நடக்க இருக்கிறது என்பது தற்போது தெரியவில்லை. இதை என் ரசிகர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் கூறியிருக்கிறார்.
+ There are no comments
Add yours