`பிகில்” திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் இந்திரஜா ரோபோ சங்கர். இவர் நடிகர் ரோபோ சங்கரின் மகள். இந்திரஜாவிற்கும் `தொடர்வோம்’ அறக்கட்டளையின் நிறுவனரும், இயக்குநருமான கார்த்திக்கிற்கும் இந்த மாதம் 24-ம் தேதி மதுரையில் திருமணம் நடைபெற இருக்கிறது. கார்த்திக், இந்திரஜா இருவரின் சொந்த ஊர் மதுரை என்பதால் அங்கேயே திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவெடுத்திருக்கிறார்கள். திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகும் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார் இந்திரஜா. தொடர்ந்து திருமணத்திற்குப் பிறகும் அவர் நடிப்பில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.
இந்நிலையில் இவர்களுடைய ஹல்தி (Haldi) நேற்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது. ரோபோ சங்கர் குடும்ப நண்பர்களும், திரைத்துறை, சின்னத்திரை சார்ந்த பிரபலங்களும் இந்த நிகழ்வுக்காக அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள். ஆட்டம், பாட்டம் எனக் கொண்டாட்டமாக ஹல்தி நடைபெற்றிருக்கிறது.
+ There are no comments
Add yours