அறிமுகமான வருடங்களில் இருந்து இப்போது வரை பல ஆண்டுகளாக கதாநாயகியாகவே கோலோச்சி வரும் நாயகி த்ரிஷாதான் என்றால் அதில் மிகையில்லை. விஜய்யின் ‘லியோ’வை அடுத்து கமல், அஜித், சிரஞ்சீவி, டொவினோ தாமஸ் என டாப் ஹீரோக்களின் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) படத்தில் கெஸ்ட் ரோலில் த்ரிஷா நடிக்கிறார் எனத் தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. ‘லியோ’ முடித்த கையோடு அஜித்தின் ‘விடா முயற்சி’யில் இணைந்தார் த்ரிஷா. அதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் சில ஷெட்யூல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இதற்கிடையே மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் ‘ஐடென்டிட்டி’ என்ற படத்தில் கமிட் ஆனார்.
அதன் படப்பிடிப்பும் சில ஷெட்யூல்கள் முடிவடைந்திருக்கின்றன. ‘விடா முயற்சி’ படப்பிடிப்பில் இருக்கும் போதுதான் மணிரத்னம், கமல் கூட்டணியின் ‘தக் லைஃப்’ படத்தில் கமிட் ஆனார் த்ரிஷா. இதன் படப்பிடிப்பு செர்பியாவில் நடந்துவருகிறது. ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்குப் பிறகு மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் த்ரிஷ்.
+ There are no comments
Add yours