Latest News Famous Tamil Cinema Comedy Actor Seshu Hospitalized Due To Cardiac Arrest What Happened To Him Check Full Details Lollu Sabha Seshu

Estimated read time 1 min read

Comedy Actor Seshu Hospitalized Latest News Tamil : தமிழ் திரையுலகில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், நடிகர் சேசு. இவர், தற்போது மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

காமெடி நடிகர் சேசு:

2003 முதல் 2008ஆம் ஆண்டு வரை பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சி, லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியில் விதவிதமான தோற்றங்களில் வந்து, வித்தியாசமாக காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைத்தவர், நடிகர் சேசு. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, தன்னுடன் சக காமெடியனாக இருந்த சந்தானத்துடன் திரையுலகிலும் ஒரு சில படங்களில் சேர்ந்தே பயணித்தார். சந்தானம் ஹீரோவாக நடித்திருந்த ஏ1 படத்தில் இவர் குடித்து விட்டு செய்யும் ரகளைகள் காமெடியாக மாறி இணையத்தில் பெரிய மீம் மெட்டீரியலாக மாறினார். இவர் கூறிய, “ஐயய்யயோ, அவரா…அவரு பெரிய ஆளாச்சேன்னு எல்லாரும் பயப்படுவாங்க..” என்ற டைலாக் இப்போது பலரால் ரீல்ஸ் செய்யப்பட்டு வருகிறது. 

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!

நடிகர் சேசு, இன்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அவர் பூரண குணநலன் பெற வேண்டி பலர், பிரார்த்தனை செய்து வருவதாக ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சேசு, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். 

மேலும் படிக்க | OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்! முழு லிஸ்ட்..

கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்தார்..

சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் 2ஆம் தேதி வடக்குப்பட்டி ராமசாமி படம் வெளியானது. இந்த படத்தில் சேசு காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. சேசுவின் கோவில் பூசாரி கதாப்பாத்திரமும் ரசிகர்களிடையே பெரிதாக பேசப்பட்டது. நடிகர் சேசு, அடுத்து சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் ‘நான் தான் கிங்கு’ படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவிய நடிகர்…

நடிகர் சேசு, 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தின் போது மக்களுக்கு அவர்களின் இல்லத்திற்கே சென்று உதவி செய்தார். தனது முகநூல் நண்பர்களின் உதவியுடன் வீதி வீதியாக சென்று, மைக்கில் முகக்கவசம் அணிவதற்கான அவசியத்தையும், தனி மனித இடைவேளை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கொரோனா காலத்தில் இவர் உதவி செய்வதை பார்த்துவிட்டு பிரபல நடிகர்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் இவரை தொடர்பு கொண்டு, இவர் மூலமாக பலருக்கு  உதவி புரிந்துள்ளனராம். 2020ஆம் ஆண்டு ஒரு ஊடகத்திற்கு கொடுத்துள்ள பேட்டியில், தான் ஒரு இதய நோயாளி என்றும் தன்னை மருத்துவர் அதிக எடையை தூக்க கூடாது என்று கூறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். பிறருக்கு உதவி செய்வதற்காக மொத்த விலை கடைக்கு சென்று அரிசி மூட்டைகளை தானே எடுத்து வருவதாகவும், இது போன்ற செயல்கள்தான் தன்னை ஆரோக்கியமாக வைத்திருப்பதாகவும் அவர் அப்போதைய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்துள்ளவர் இப்போது முன்னணி நடிகர்! யாரென்று தெரிகிறதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours