ராம் சரண் 16வது பட தலைப்பு இதுவா…
16 மார், 2024 – 11:49 IST
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின் ஷங்கர் இயக்கத்தில் ‛கேம்சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். பன்மொழிகளில் தயாராகும் இந்தப்படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்தப்படத்திற்கு பின் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார் ராம் சரண். இயக்குனர் சுகுமார் வசனத்தில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் அல்லது மேயில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘பெடி’ என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
இதையும் பாருங்க !
வரவிருக்கும் படங்கள் !
- நா நா
- நடிகர் : சசிகுமார் ,
- இயக்குனர் :NV நிர்மல்குமார்
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
Tweets @dinamalarcinema
+ There are no comments
Add yours