சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குஷ்பு, தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விமர்சித்து பேசியிருந்தார்.
அதாவது தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போட்டு விடுவார்களா? எனக் கேள்வி எழுப்பி இருந்தார். பலருக்கும் பயன்படும் இந்த மகளிர் உரிமைத் திட்டம் குறித்து குஷ்புவின் சர்ச்சைக்குரிய பேச்சிற்கு தி.மு.க.வினர் மட்டுமின்றி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகை அம்பிகா குஷ்புவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது X வலைதளப்பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில் “யாராக இருந்தாலும் சரி, எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ அதனை ஏற்றுக்கொண்டு பாராட்டுங்கள்.
பாராட்ட மனமில்லை என்றால் அமைதியாக இருங்கள். ‘பிச்சை’ என அவமானப்படுத்தும் சொற்களை பயன்படுத்தாதீர்கள். 5 ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான்” என்று பதிவிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours