Most Talked Indian Movies 2023 : 2023ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட படங்கள் குறித்த பட்டியலை தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டது. இந்த பட்டியலில் பல தமிழ் படங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தி படங்களின் பெயர்கள், ஒரு சில மட்டுமே இப்பட்டியலில் இருக்கின்றன. அப்படி, இந்திய அளவில் பெரிதாக பேசப்பட்ட படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போமா?
8.டன்கி:
இந்த லிஸ்டில் எட்டாவது இடத்தில் இருப்பது ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி வெளிவந்த ‘டன்கி’படம்தான். இதில் டாப்சி, விக்கி கௌஷல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல விமர்சனங்களை வட இந்தியாவில் பெறவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் இதுகுறித்து அதிகமாக பேசப்பட்டது.
7.பதான்:
அதிகம் பேசப்பட்ட படங்களின் லிஸ்டில் 7வது இடத்தில் இருக்கும் படம், பதான். இந்த படம், ஜனவரி 23ஆம் தேதி வெளியானது. இப்படம் நல்ல வசூலை பெற்று மக்களிடையே வரவேற்பையும் பெற்றது. இதில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்தார்.
6.ஆதிபுருஷ்:
பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி வெளியான படம், ஆதி புருஷ். இந்த படத்தை ஓம் ராவத் இயக்கியிருந்தார். இராமாயண கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் ராமராக பிரபாஸும், சீதையாக கிருத்தி சனோனும் நடித்திருந்தனர். இராவணனாக சயிஃப் அலிகான் நடித்திருந்தார். வட இந்தியாவில் அதிகம் ஹைப்பை ஏற்படுத்திய இப்படம், சுமார் 650 கோடி செலவில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ரிலீஸிற்கு பிறகு இப்படத்திற்கு மிகவும் மோசமான விமர்சனங்களே கிடைத்தது. இதனால் இப்படம் இந்திய அளவில் அதிகமாக பேசப்பட்டது.
5.ஜவான்:
தமிழ் இயக்குநர் அட்லீ,ச் ஷாருக்கானை வைத்தி இயக்கியிருந்த படம், ஜவான். இந்த படத்தில் நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம், உலகளவில் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலகெஷ்னை பெற்றது. அதிகம் பேசப்பட்ட இந்திய படங்களின் லிஸ்டில் 5வது இடத்தில் இருக்கிறது, ஜவான்.
மேலும் படிக்க | கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்துள்ளவர் இப்போது முன்னணி நடிகர்! யாரென்று தெரிகிறதா?
4.துணிவு:
ஹெச்.வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி வெளியான படம், துணிவு. இந்த படத்தில் அஜித்குமார் ஹீரோவாக நடிக்க அவருடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் மஞ்சு வாரியர், தர்ஷன், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
3.வாரிசு:
விஜய் நடிப்பில் அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக ஜனவரி 11ஆம் தேதி வெளியான படம், வாரிசு. இதனை, தெலுங்கு இயக்குநர் வம்சி பைடபள்ளி இயக்கியிருந்தார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படம் அதிகம் பேசப்பட்டதற்கு காரணம், பல வருடங்களுக்கு பிறகு விஜய் படமும் அஜித் படமும் ஒரே நாளில் வெளியானது. அது மட்டுமன்றி, வாரிசு படம் சீரியல் போல இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இதனால் இப்படம் குறித்து சமூக வலைதளங்களில் ட்ரோல்கள் அதிகமாக இருந்தன.
2.சலார்:
இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட படங்களின் லிஸ்டில் சலார் படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த படத்தை கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படம், பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்டதனாலும், கே.ஜி.எஃப் யுனிவர்சில் ஒரு கதை என சொல்லப்பட்டதாலும் இது குறித்த சமூக வலைதள பதிவுகள் அதிகமாக இருந்தன. ஆனால், இப்படம் தமிழகத்தில் தோல்வி அடைந்தது.
1.லியோ:
கடந்த ஆண்டு இந்திய அளவில் பேசப்பட்ட படங்களின் முதல் இடத்தில் உள்ளது, லியோ திரைப்படம்தான். விஜய் ஹீராேவாக நடித்திருந்த இந்த படத்தில் த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், அனுராக் காஷ்யப், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பான் இந்திய நடிகர்களின் கேமியோ கதாப்பாத்திரங்கள், அனிருத்தின் ஹிட் பாடல்கள், எல்.சி.யுவின் ஒரு அங்கம், குறிப்பாக நடிகர் விஜய் நடித்திருந்த படம் என்பதால் லியோ படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இதனாலேயே இப்படம் குறித்து அதிகம் பேர் சமூக வலைதளங்களில் பேசினர்.
மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜின் தங்கையை பார்த்துள்ளீர்களா? அடடே..இவ்ளோ அழகா இருக்காங்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours