ஓடிடி வெளியீடு தாமதம் : விளக்கமளித்த ‘ஹனுமான்’ இயக்குனர்
15 மார், 2024 – 11:30 IST
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு தெலுங்கில் வெளிவந்த படம் ‘ஹனுமான்’. இப்படம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. படம் வெளியாகி இரண்டு மாதங்களாகியும் ஓடிடியில் இப்படம் வெளியாகதது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இன்று ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து படத்தின் இயக்குனர் பிரசாந்த் சர்மா, “ஹனுமான் படத்தின் ஓடிடி வெளியீடு வேண்டுமென்றே தாமதம் ஆகவில்லை. படத்தை உங்களுக்கு சீக்கிரம் தர, இதற்காக நாங்கள் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம். சிறந்ததை உங்களுக்குத் தர வேண்டும் என்பதே எங்களது நோக்கம், நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படம் ஓடிடியிலும் வெளியாகும் மொழிகள் அனைத்திலும் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours