இவ்வளவு ஏன், ஒரு சின்னக் குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் ஒரு மாத மளிகைச் செலவுக்குப் போதும். நிஜம் இப்படி இருக்க, இந்தப் பணத்தைப் பிச்சைன்னு சொன்னதை என்னால ஜீரணிக்கவே முடியலை. பேசற விஷயம் ரொம்பவே சீரியஸானதுன்னு தெரியாம குஷ்பு பேசிட்டாங்களான்னு தெரியலை, ஆனா ரொம்பவே தப்பான பேச்சு! என்னைப் பொறுத்தவரை நல்ல விஷயம்னா அதைப் பத்தி நாலு வார்த்தை நல்லவிதமா சொல்லணும். பாராட்டத் தோணலையா, பேசாம இருந்துடனும்.
என் கருத்தை நான் சொன்னேன். உடனே நீங்க தி.மு.க-வா, நீங்க அ.தி.மு.க-வான்னு வரிசையில வந்துட்டாங்க சிலர். இது மட்டுமில்லீங்க. சமூக வலைதளங்கள்ல ஒரு பண்டிகைக்கு வாழ்த்துச் சொன்னா கூட, அங்கயும் திட்டறதுக்கு வர்ற ஒரு கூட்டம் இருக்கு. என்னை இப்படித் தொடர்ந்து திட்டிட்டு வர்றவங்க யாருன்னு எனக்குத் தெரியும். ஆனா அவங்க மீது பதிலுக்கு எனக்குக் கோபம் வரலை. அவங்க பாட்டுக்குத் திட்டிட்டுப் போகட்டும். நான் எந்தவொரு கட்சியிலயும் இல்லாத போது, யார் என்ன சொன்னாலும் என்ன ஆயிடப் போகுது!” என்கிறார்.
கருத்துச் சொல்கிறவர்களுக்குக் கட்சிச் சாயம் பூசப்படுவதைப் பற்றிக் கேட்டபோது,
“முன்னாடி சோஷியல் மீடியா இல்லை. அதனால இப்படி யாரும் கருத்துச் சொல்லியிருக்க மாட்டாங்க. இப்ப அப்படியொரு வசதி இருக்கறதால அவங்கவங்க மனசுல பட்டதைச் சொல்றாங்க. இது தேர்தல் நேரம்கிறதால அம்பிகாவுக்கு அரசியல் ஆசை வந்திடுச்சுனு கிளப்பி விடப்படும்னு எனக்குத் தெரியும். அதனால என்ன? நாலு நாளைக்கு என்னைப் பத்திப் பேசுவாங்களா, பேசிட்டுப் போகட்டும்” எனக் கேஷுவலாகச் சொல்கிறார்.
+ There are no comments
Add yours